5 துணை மின்நிலையங்களில் நாளை மின்தடை
புதுக்கோட்டை மாவட்டத்தில் 5 துணை மின்நிலையங்களில் நாளை மின்தடை ஏற்படுகிறது.;
நாளை மின்தடை
திருமயம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும், திருமயம், மணவாளங்கரை, இளஞ்சாவூர், ராமச்சந்திரபுரம், கண்ணங்காரைக்குடி, ஊனையூர், சவேரியார் புரம், குளத்துப்பட்டி, பட்டணம், மலைகுடிபட்டி, மாவூர், கோனாபட்டு, துளையானூர், தேத்தாம்பட்டி, ஆதனூர், வாரியப்பட்டி, கொள்ள காட்டுப்பட்டி, ராங்கியம், கண்ணனூர், மேலூர், அம்மன்பட்டி, அரசம்பட்டி, லட்சுமிபுரம், ஏனப்பட்டி, விராச்சிலை, பெல் நிறுவனம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று உதவி செயற்பொறியாளர் ராமநாதன் தெரிவித்துள்ளார்.
கீரனூர், செங்களூர்...
குளத்தூர், குன்றாண்டார்கோவில் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும், கீரனூர் பேரூராட்சி பகுதிகள் பரந்தாமன் நகர், கீழகாந்திநகர், மேல காந்தி நகர், நான்கு ரத வீதிகள், எழில் நகர், என்.சி.ஓ. காலனி, முஸ்லிம் தெரு, பஸ் ஸ்டாண்ட், ஜெய்ஹிந்த் நகர், ஹவுசிங் யூனிட், பசுமைநகர், அழகு நகர், செங்களூர், கிள்ளுக்கோட்டை, உலகத்தான்பட்டி, உடையாளிப்பட்டி, ராக்கதாம்பட்டி, ஒடுகம்பட்டி, வாழமங்களம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று கீரனூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ஜேம்ஸ் அலெக்சாண்டர் தெரிவித்துள்ளார்.
பெரியார் நகர், முள்ளூர்...
புதுக்கோட்டை சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின் வினியோகம் பெறும், சிப்காட் நகர், சிப்காட் தொழிற்பேட்டை, தாவூது மில், சிட்கோ தொழிற்பேட்டை, (திருச்சி ரோடு), ரெங்கம்மாள் சத்திரம், கே.கே.நகர், வடசேரிப்பட்டி, வாகவாசல், முள்ளூர், இச்சடி, வடவாளம், புத்தாம்பூர், செம்பாட்டூர், வேடயப்பட்டி, செட்டியாபட்டி, ராயப்பட்டி, காயாம்பட்டி, மேலக்காயம்பட்டி, வேப்பங்குடி, பள்ளத்திவயல், பாலன் நகர், பழனியப்பா நகர், அபிராமிநகர், கவிதா நகர், வசந்தபுரி நகர், பெரியார் நகர், தைலா நகர், ராம் நகர், ஜீவா நகர், சிட்கோ (தஞ்சாவூர் ரோடு) ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது என்று புதுக்கோட்டை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகம், நீர்பழனி..
விராலிமலை ஒன்றியம், தொண்டைமான்நல்லூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின் வினியோகம் பெறும் தொண்டைமான்நல்லூர், உடையவயல், நீர்பழனி, வெம்மணி, மண்டையூர், புலியூர், களமாவூர், காரப்பட்டு, தென்னத்திரையான்பட்டி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், பாரதிதாசன் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என்று மாத்தூர் உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.