குஜிலியம்பாறை பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
குஜிலியம்பாறை பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
குஜிலியம்பாறை அருகே வள்ளிப்பட்டி, சத்திரப்பட்டி மற்றும் சின்னுலுப்பை ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதையொட்டி அம்மாபட்டி, ராமகிரி, மல்லபுரம், குஜிலியம்பாறை, இலுப்பபட்டி, புளியம்பட்டி, சி.சி.சி.குவாரி, உக்குவார்பட்டி, வாணிக்கரை, கூம்பூர், பள்ளபட்டி, அழகாபுரி, சத்திரப்பட்டி, சேர்வைகாரன்பட்டி, கரிக்காலி, பல்லாநத்தம், தாதாநாயக்கனூர், இடையபட்டி, காளப்பட்டி, பூசாரிபட்டி, திருமக்கம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது. இந்த தகவலை குஜிலியம்பாறை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பிச்சை தெரிவித்துள்ளார்.