திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவிலில் பவுர்ணமி மகா தீபம் ஏற்றம்

திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவிலில் பவுர்ணமி மகா தீபம் ஏற்றப்பட்டது.;

Update: 2022-12-08 18:45 GMT

திண்டிவனம்:

வானூர் தாலுகா திருவக்கரையில் பிரசித்திபெற்ற வக்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இங்கு மாதந்தோறும் பவுர்ணமி தினத்தன்று மகா தீபம் ஏற்றப்படுவது வழக்கம். அதன்படி கார்த்திகை மாத பவுர்ணமியான நேற்று முன்தினம் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. வக்ரகாளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதனை தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு கோவிலின் மேல் பிரகாரத்தில் அமைந்துள்ள பீடத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த திரளான பக்தர்கள் ஓம் காளி, வக்ர காளி, ஜோதி, ஜோதி, வக்ரகாளி ஜோதி, ஜோதியை பார்த்தால் பாவம் தீரும் என கோஷமிட்டனர். இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் விஜயராணி, செயல் அலுவலர் சிவக்குமார், ஆய்வாளர் உமாமகேஸ்வரி, சிவாச்சாரியார் சேகர் குருக்கள், மேலாளர் ரவி ஆகியோர் செய்திருந்தனர். மேலும் விழுப்புரம், திண்டிவனம், புதுச்சேரி மற்றும் பல வழித்தடங்களில் இருந்து கோவிலுக்கு சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்