கைலாசநாதர் மலைக்கோவிலில் பவுர்ணமி கிரிவலம்
பெரியகுளம் அருகே உள்ள கைலாசநாதர் மலைக்கோவிலில் பவுர்ணமியையொட்டி கிரிவலம் நடந்தது.;
பெரியகுளம் அருகே கைலாசப்பட்டி பகுதியில் பிரசித்தி பெற்ற கைலாசநாதர் மலைக்கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று, பவுர்ணமியை முன்னிட்டு கிரிவலம் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கிரிவலம் சென்று சுவாமியை வழிபட்டனர். தொடர்ந்து கைலாசநாதர் மற்றும் பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் நடந்த அன்னதானத்தை தொழிலதிபர் சர்வேஸ்வர ராஜா குடும்பத்தினர் தொடங்கி வைத்தனர். அன்னதானத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழுத் தலைவர் வி.ப.ஜெயபிரதீப், செயலாளர் சிவக்குமார், பொருளாளர் விஜயராணி மற்றும் பராமரிப்பு குழுவினர் செய்திருந்தனர்.