நாமக்கல்லில் கொட்டி தீர்த்த மழை
நாமக்கல்லில் திடீரென பெய்த மழையால் புதுச்சத்திரம் பகுதியில் 17 மில்லி மீட்டர் மழை பதிவானது.;
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. நேற்றுமுன்தினம் அதிகபட்சமாக புதுச்சத்திரம் பகுதியில் 17 மில்லி மீட்டர் மழை பதிவானது.
நாமக்கல் நகரைப் பொருத்தவரையில் நேற்று காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் அதிகமாகவே காணப்பட்டது. இரவு 9.30 மணி அளவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை அரை மணி நேரத்திற்கு மேலாக கொட்டி தீர்த்ததால் சாலையோரங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதை காண முடிந்தது. இந்த மழையால் இரவில் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.