கோழிப்பண்ணை கொட்டகை எரிந்து சேதம்

கோழிப்பண்ணை கொட்டகை எரிந்து சேதம் அடைந்தது.

Update: 2023-07-30 19:00 GMT

எஸ்.புதூர்

சிவகங்கை மாவட்டம் குன்னத்தூர் ஊராட்சி, மாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் மலைச்சாமி(வயது 65). இவர் அதே பகுதியில் கோழிப்பண்ணை நடத்தி அங்கேயே தனது மனைவி பஞ்சவர்ணத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில் பஞ்சவர்ணம் நேற்று உடல்நிலை சரியில்லாமல் இறந்தார். அவரின் இறுதி சடங்கு நேற்று மாலை நடைபெற்றது. அவரது உடலை உறவினர்கள் அடக்கம் செய்ய சென்ற நேரத்தில் திடீரென கோழிப்பண்ணை கொட்டகை தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்து வந்த சிங்கம்புணரி தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி துறையினர் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் தீயில் கருகி 10 மூடை நெல், 3 மூடை வரகு மற்றும் பொருட்கள் சேதமடைந்தன. ேமலும் ரூ.2 லட்சத்து 65 ஆயிரம் எரிந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே காற்றின் வேகத்தினால் தீப்பொறி பறந்து பக்கத்து தோட்டத்தில் இருந்த கொட்டகையில் தீப்பிடித்தது. அதில் இருந்த டீசல் என்ஜின், பிளாஸ்டிக் பைப்புகள் எரிந்து சேதமாகியது. இதுகுறித்து புழுதிபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்