பாத்திர தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

நெல்லையில் பாத்திர தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2023-03-20 21:29 GMT

பித்தளை பாத்திர தொழிலாளர்கள் நெல்லை டவுனில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சி.ஐ.டி.யு. பொது தொழிலாளர் சங்க தலைவர் ராஜன் தலைமை தாங்கினார். பித்தளை பாத்திர தொழிலாளர் சங்க தலைவர் முத்து, செயலாளர் இஸ்மாயில் சேட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் பீர் முகமதுஷா ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். பித்தளை பாத்திர தொழிலாளர்களின் கூலி உயர்வை உடனே வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் செந்தில், நாராயணன், சரவணபெருமாள், ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்