கார் மோதி தபால் ஊழியர் பலி
கனியாமூரில் கார் மோதி தபால் ஊழியர் பலியானாா்.
கனியாமூர்:
சின்னசேலம் அடுத்த மாதவச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 43). தபால் ஊழியர். இவர் நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் சென்னை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கனியாமூர் பஸ் நிறுத்தும் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த கார் மோதியதில் முத்துசாமி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்த புகாரின்பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரான புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்த சுரேஷ்குமார் மகன் வெங்கடேஷ்(34) என்பவரை கைது செய்தனர்.