தபால் வாடிக்கையாளர்கள் குறைகேட்பு கூட்டம்

விருத்தாசலத்தில் தபால் வாடிக்கையாளர்கள் குறைகேட்பு கூட்டம் வருகிற 26-ந் தேதி நடக்கிறது;

Update: 2023-06-22 18:45 GMT

விருத்தாசலம் கோட்ட தபால் வாடிக்கையாளர்கள் குறைகேட்பு கூட்டம் விருத்தாசலத்தில் கடலூர் மெயின்ரோடு, கே.பி.டி.பில்டிங்கில் செயல்பட்டு வரும் விருத்தாசலம் கோட்ட தபால் அலுவலகங்களின் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வருகிற 26-ந் தேதி(திங்கட்கிழமை) காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் வாடிக்கையாளர்கள் கலந்துகொண்டு தபால் சேவை சம்பந்தமான குறைகளை தெரிவிக்கலாம். மேலும் தங்கள் குறைகளை dovridhachalam.tn@indiapost.gov.in என்ற இ-மெயில் முகவரியிலும் தெரிவிக்கலாம் என கோட்ட கண்காணிப்பாளர் அப்துல் லத்தீப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்