காதில் பூ சுற்றி தண்ணீர் பிச்சை கேட்டு கிராம மக்கள் போராட்டம்

ராமநாதபுரம் அருகே கடந்த 5 மாதமாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை என்று காதில் பூ சுற்றி தண்ணீர் கேட்டு பிச்சை போராட்டம் நடத்தினர்.;

Update: 2022-05-30 16:56 GMT

ராமநாதபுரம்.

ராமநாதபுரம் அருகே கடந்த 5 மாதமாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை என்று காதில் பூ சுற்றி தண்ணீர் பிச்சை கேட்டு போராட்டம் நடத்தினர்.

போராட்டம்

ராமநாதபுரம் மாவட்ட பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் வீரகுல தமிழர் படை மாநில ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் தலைமையில் புத்தேந்தல் கிராமத்தை சேர்ந்த ஏராளமானோர் கலெக்டர் அலுவலகம் வந்தனர். இவர்கள் அனைவரும் காதில் பூ சுற்றி தட்டேந்தி தண்ணீர் பிச்சை கேட்டு போராட்டம் நடத்தினர்.

இவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- ராமநாதபுரம் அருகே உள்ள புத்தேந்தல் வன்னிக்குடி, செஞ்சோலை காப்பகம் உள்பட 109 கிராமங்களில் கடுமையான குடிநீர் தட்டுபாடு நிலவுகிறது. கடந்த 5 மாதத்திற்கும் மேலாக தண்ணீர் வினியோகம் செய்யப்படவில்லை. காவிரி குடிநீர் திட்டத்தை முறையாக பராமரித்து மக்களின் அத்தியாவசிய தேவையான தண்ணீர் வினியோகம் செய்யப்படவில்லை.

நடவடிக்கை

இதுகுறித்து காவிரி குடிநீர் திட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் மக்கள் குடிநீருக்காக தவியாய் தவித்து வருகின்றனர். எனவே, உடனடியாக மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட சுத்தமான காவிரி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்