பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் மரணம்...!

பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்தாக கூறப்படுகின்றது.;

Update:2023-02-04 14:31 IST

சென்னை,

தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம்(வயது 78). இவர் கடந்த 1974-ம் ஆண்டு வெளியான தீர்க்க சுமங்கலி என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு பாடகியாக அறிமுகமானார். பின்னர், தமிழ், தெலுங்கு, கன்னடம் உட்பட மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்

சமீபத்தில் இவருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. இந்த நிலையில் சென்னையில் உள்ள தனது வீட்டில் பாடகி வாணி ஜெயராம் தவறி விழுந்து உயிரிழந்தாக கூறப்படுகின்றது.

இவருடைய திடீர் மரணம் இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்