குளத்தில் தூய்மை பணி
வருங்கால வைப்புநிதி அலுவலகம் சார்பில் குளத்தில் தூய்மை பணிகள் நடைபெற்றது.
மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நெல்லை வருங்கால வைப்பு நிதி அலுவலகம் சார்பில் நேற்று முன்தினம் பாளையங்கோட்டை என்.ஜி.ஓ.பி.காலனியில் உள்ள பெரியகுளம், குளக்கரை பகுதியை தூய்மைப்படுத்தும் பணி பிரிவு மேற்பார்வையாளர் முரளிராஜன் தலைமையில் நடந்தது.
இதில் மாநகராட்சி கவுன்சிலர் சகாய ஜூலியட் மேரி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். குளத்தை தூய்மைப்படுத்தும் பணியில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலக பணியாளர்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.