சுடலை மகாராஜா கோவிலில் பூக்குழி திருவிழா
கோவில்பட்டி சுடலை மகாராஜா கோவிலில் பூக்குழி திருவிழா நடந்தது.;
கோவில்பட்டி:
கோவில்பட்டி நடராஜபுரம் தெருவில் உள்ள சிவசக்தி பத்திரகாளி அம்மன், மலையாளத்து சுடலை மகாராஜா கோவிலில் 33-ம் ஆண்டு ஆடி கொடை விழா மற்றும் பூக்குழி திருவிழா கடந்த 3-ந்தேதி தொடங்கி நடந்து வந்தது. நேற்று முன்தினம் கணபதி ஹோமம், வேள்வி பூஜை, அபிஷேகம், முளைப்பாரி ஊர்வலம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. நள்ளிரவு 12 மணிக்கு சாமக்கொைட மற்றும் பூக்குழி விழா நடந்தது. சங்கர் சுவாமிகள் கையில் குழந்தைகளை சுமந்தபடி பூக்குழி இறங்கி பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.