தர்மபுரி கோட்டை வர மகாலட்சுமி உடனாகிய பரவாசுதேவ பெருமாள் கோவிலில் கருடாழ்வாருக்கு சந்தனகாப்பு அலங்கார சேவை நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு 12 வகையான நறுமண பொருட்களை கொண்டும், பால், தயிர், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம், குங்குமம், மஞ்சள் போன்ற பொருட்களை கொண்டும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கருடாழ்வாருக்கு சந்தனகாப்பு அலங்கார சேவை நடைபெற்றது. இதையடுத்து சிறப்பு வழிபாடு, பூஜை, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் அபிஷேகம் செய்யப்பட்ட சந்தனம் பிரசாதமாக வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.