அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை

ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழையை முன்னிட்டு அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.;

Update: 2022-07-22 18:57 GMT


ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழையை முன்னிட்டு அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.

ஆடி வெள்ளி

ஆடி வெள்ளிக்கிழமையில் அம்மன் கோவில்களுக்கு சென்று வழிபாடுகளை நடத்துவது சிறப்பு. அதன்படி நேற்று ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை என்பதால் காங்கயம் பஸ் நிலையம் அருகில் உள்ள துர்க்கையம்மன் கோவில், மெயின் ரோடு பேட்டை மாரியம்மன் கோவில், பாப்பினி பெரியநாயகியம்மன் கோவில், சவுண்டம்மன் கோவில் மற்றும் காங்கயம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன. இதில் அதிகாலை முதலே பெண்கள் அம்மன் கோவில்களுக்கு திரளாக சென்று பங்கேற்று வழிபாடு செய்தனர்.

வெள்ளகோவில் பகுதியில் உள்ள மாகாளியம்மன், செல்லாண்டியம்மன், கண்ணபுரம் மாரியம்மன், எல்.கே.சி. நகர். புற்றுக்கண் நாகாத்தாள், மயில்ரங்கம் திருமலைஅம்மன், மாரியம்மன், உத்தமபாளையம் மாரியம்மன் கோவில்களில் நேற்று ஆடிவெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு அலங்கார அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன, ஆடிவெள்ளிக்கிழமையையொட்டி ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.

வெள்ளகோவில் தர்மசாஸ்தா அய்யப்ப சாமி கோவிலில் உள்ள மஞ்சள் மாதா பகவதி அம்மனுக்கு ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டுச்சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

குண்டடம்

குண்டடம் கொங்காளம்மன் கோவிலில் அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் அம்மனை தரிசனம் செய்தனர். முடிவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்