32 இடங்களில் விநாயகர் சிலை வைத்து பூஜை

சோளிங்கரில் 32 இடங்களில் விநாயகர் சிலை வைத்து பூஜை செய்யப்பட்டது.;

Update: 2022-09-01 18:16 GMT

சோளிங்கர்

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அனைத்து ஆட்டோ ஓட்டுநர் நல சங்கம் சார்பில் பஸ் நிலையத்தில் விநாயகர் சதுர்த்தி விழா ஆட்டோ சங்க தலைவர் சேகர் தலைமையில் நடைபெற்றது.

இதில் 10 அடி விநாயகர் சிலை வைத்து சிறப்பு பூஜை செய்து மகா தீபாராதனை நடைபெற்றது.

இதில் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.முனிரத்தினம், சோளிங்கர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி நிலவரசன், பா.ம.க. மாநில சட்ட பாதுகாப்பு குழு துணை செயலாளர் சக்கரவர்த்தி, காங்கிரஸ் நகர தலைவர் கோபால், நகராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி, தி.மு.க. மாவட்ட அவைத் தலைவர் அசோகன், துணைத்தலைவர் பழனி, அ.தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏ.எல்.விஜயன், நகராட்சி வார்டு உறுப்பினர் ஏழுமலை, வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

சங்க செயலாளர் சாரதி, பொருளாளர் சரவணன், துணைத்தலைவர் ரமேஷ், கவுரவ தலைவர் பாலன், நிர்வாகி செல்வம், வழக்கறிஞர் லோகநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

சோளிங்கரில் 32 இடங்களில் விநாயகர் சிலை வைத்து விழா நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்