பொன்னியம்மன் கோவில் தேரோட்டம்
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த வெங்கப்பாக்கம் கிராமத்தில் பொன்னியம்மன் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது.;
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதையொட்டி பொன்னியம்மன் வீதிஉலா நடை பெற்றது.
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் படப்பை அடுத்த சாலமங்கலம் கிராமத்தில் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த செல்லியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கான தேர் சிதிலமடைந்த இருந்ததால் தேரோட்டம் 30 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்தது.
இந்த நிலையில் புதிய தேர் செய்யப்பட்டு தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில் செல்லியம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.