பொங்கல் சிறப்பு பஸ்கள் : இதுவரை 4 லட்சம் பேர் பயணம்

சென்னையில் இருந்து போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.;

Update: 2023-01-14 10:13 GMT

சென்னை,

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்கள் எவ்வித சிரமமும், இடையூறும் இன்றி எளிதாக தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய ஏதுவாக சென்னையில் இருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

சென்னையிலிருந்து இயக்கப்படும் 6,796 சிறப்புப் பஸ்களில் இதுவரை 3.94 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

சென்னையிலிருந்து பொங்கல் சிறப்புப் பஸ்களில் செல்ல இதுவரை 1.78 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். இன்று சென்னையில் இருந்து 2,100 தினசரி பஸ்களுடன் 2,010 சிறப்புப் பஸ்கள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்