பாஞ்சாலங்குறிச்சிவீரபாண்டிகட்டபொம்மன்கோட்டையில்காணும் பொங்கல் கோலாகலம்

பாஞ்சாலங்குறிச்சிவீரபாண்டிகட்டபொம்மன்கோட்டையில்காணும் பொங்கல் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமான சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டு மகிழ்ந்தனர்.

Update: 2023-01-16 18:45 GMT

ஓட்டப்பிடாரம்:

பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டையில் நேற்று நடந்த காணும் பொங்கல் கொண்டாட்டத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டு மகிழ்ந்தனர்.

காணும் பொங்கல்

ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டையில் நேற்று காலையில் காணும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டுஅதிகாலை முதலே நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கோட்டைக்கு சுற்றுலா பயணிகள் வரத்தொடங்கினர்.

மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை மற்றும் வீரச்சக்க தேவி ஆலய குழு சார்பில் நடந்த விழாவுக்கு மாவட்ட சுற்றுலா அலுவலர் திருவாசன் தலைமை தாங்கினார்.

காலையில் வீரச்சக்கதேவி ஆலயத்தில் மாட்டுப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் மாட்டுக்கு கோமாத பூஜை நடந்தது. கோவில் வளாகத்தில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.

கலைநிகழ்ச்சிகள்

தொடர்ந்து வீரச்சக்கதேவி ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது. அங்கு குவிந்திருந்த சுற்றுலா பயணிகளுக்கு பொங்கல் வழங்கப்பட்டன. இதனை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் வசதிக்காக மாவட்ட இசை பள்ளி சார்பில் பரதநாட்டியம், இன்னிசை கச்சேரி மற்றும் பல்வேறு விதமான கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

இவ்விழாவில் குடும்பத்தினருடன் பங்கேற்ற சுற்றுலா பயணிகள், ஆங்காங்கே மரத்தடியில் அமர்ந்து தாங்கள் கொண்டு உணவுகளை ருசித்தவாறு காணும் பொங்கலை கொண்டாடி மகிழ்ந்தனர்.

செல்பி

கோட்டையில் உள்ள வீரபாண்டி கட்டபொம்மன் சிலைக்கு முன்பு ஏராளமானோர ்செல்பி எடுத்தனர். பின்னர் சுதந்திர போராட்டத்தின் போது நிகழ்ந்த சண்டைக் காட்சி புகைப்படங்களை ஆர்வமுடன் பார்வையிட்டனர். சுற்றுலா பயணிகளுக்கு பாஞ்சாலங்குறிச்சி பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் குடிநீர் வசதி செய்து தரப்பட்டிருந்தது. கோட்டையில் சுற்றுலா பயணிகள் மாலை 5 மணி வரை கலை நிகழ்ச்சிகளை கண்டுகளித்தனர். இதில் பாஞ்சாலங்குறிச்சி பஞ்சாயத்து தலைவர் கமலாதேவி யோகராஜ், வீரச்சகாதேவி ஆலயக்குழு தலைவர் முருகபூபதி, செயலாளர் செந்தில், பொருளாளர் சுப்புராஜ் சவுந்தர், துணை தலைவர்கள் முருகேசன், வேல்சாமி, ஊராட்சி செயலாளர் சுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பலத்த போலீஸ் பாதுகாப்பு

மேலும் பாஞ்சாலங்குறிச்சி கோட்டைக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் படி மணியாச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு லோகேஸ்வரன், ஓட்டப்பிடாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமன் ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்