கருப்பசாமி கோவிலில் பொங்கல் விழா
கருப்பசாமி கோவிலில் பொங்கல் விழா நடைபெற்றது.;
விருதுநகர் அருகே மேல துலுக்கன்குளம் கிராமத்தில் பால நாகம்மாள், கார்மேக கள்ளழகர், கருப்பசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பூஜை பெட்டி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டது. பெண்கள் பால் குடம் எடுத்துச் சென்று பொங்கலிட்டு நேர்த்திக் கடன் செலுத்தினர். பக்தர்கள் அலகு குத்தியும், தீச்சட்டி எடுத்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.