பொங்கல் பண்டிகை: தாம்பரத்தில் இருந்து புறப்பட்ட சிறப்பு ரெயிலில் அலைமோதிய மக்கள் கூட்டம்

பொங்கல் பண்டிகையையொட்டி தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது.

Update: 2023-01-12 17:39 GMT

சென்னை,

பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறைய முன்னிட்டு சென்னையில் வசித்துவரும் வெளியூரை சேர்ந்த மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல மும்முரம் காட்டி வருகினனர். ரெயில் மற்றும் பேருந்துகளில் பெரும்பாலான இருக்கைகள் நிரம்பிவிட்ட நிலையில், மக்கள் தங்களது பயண நேரத்தை சூழலுக்கு ஏற்ப மாற்றி பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு வருகின்றனர். பெரும்பாலான மக்கள் நாளை முதல் தங்களது பயணத்தை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பலர் இன்று முதலே தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுக்க தொடங்கிவிட்டனர்.

இதனிடையே பயணிகள் வசதிக்காக சென்னையில் இருந்து நாகர்கோவில், திருவனந்தபுரம் பகுதிகளுக்கு சிறப்பு ரெயில்களை இயக்க தெற்கு ரெயில்வே ஏற்பாடு செய்துள்ளது. இந்த சிறப்பு ரெயில்கள் இன்று முதல் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது. தாம்பரத்தில் இருந்து இன்று இரவு 9 மணிக்கு புறப்பட்ட ரெயிலில் மக்கள் கூட்டம் அலைமோதியது. முன்னதாக இன்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்