பொங்கல் விழா
காரைக்குடி முத்துப்பட்டணம் ஸ்ரீ சரஸ்வதி ஆரம்பப்பள்ளியில் பொங்கல் விழா நடைபெற்றது.;
காரைக்குடி
காரைக்குடி முத்துப்பட்டணம் 3-வது வீதியில் உள்ள 74 ஆண்டு பழமையான ஸ்ரீ சரஸ்வதி ஆரம்பப்பள்ளியில் பொங்கல் விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியை மீனா தலைமை தாங்கினார். இதையொட்டி ஆசிரிய-ஆசிரியைகள், மாணவர்கள், பெற்றோர்கள் ஒன்று கூடி பொங்கலிட்டனர். மாணவர்கள் பொங்கலோ பொங்கல் என உற்சாக குரல் எழுப்பி பொங்கல் விழாவில் கலந்து கொண்டனர். தலைமை ஆசிரியை மீனா விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் கரும்பு வழங்கி பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார். விழாவையொட்டி மாணவர்களின் கலைநிகழ்ச்சி நடந்தது.