மழையால் வெறிச்சோடிய வாக்குச்சாவடிகள்
மழையால் வாக்குச்சாவடிகள் வெறிச்சோடின.;
பெரம்பலூர் மாவட்டத்தில் மேலப்புலியூர் கிராம ஊராட்சியில் வாக்களிக்க 9 வாக்குச்சாவடிகளும், பிலிமிசை 4-வது வார்டுக்கும், வி.களத்தூர் 7-வது வார்டுக்கும் தலா ஒரு வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தது. வாக்குப்பதிவு தொடங்கியவுடன் நிறைய பேர் ஆர்வத்துடன் வாக்களிக்க வந்தனர். குறிப்பாக பெண் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்தனர். இதனால் தொடக்கத்திலேயே விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்தது. அவ்வவ்போது மழை பெய்ததால் வாக்காளர்கள் வாக்களிக்க வரவில்லை. இதனால் அந்த நேரத்தில் வாக்குச்சாவடிகள் வெறிச்சோடி காணப்பட்டன. பின்னர் வாக்குச்சாவடியில் ஒவ்வொருவராக வாக்களித்து சென்றனர். கொரோனாவினால் பாதிக்கப்பட்ட வாக்காளர்களுக்கு மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாக்களிக்க நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் வாக்காளர்கள் யாரும் கொரோனாவினால் பாதிக்கப்படாததால், யாரும் வரவில்லை.