வாக்குச்சாவடி தி.மு.க. முகவர்களுக்கான பட்டியல்; சண்முகையா எம்.எல்.ஏ. வழங்கினார்

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி தி.மு.க. முகவர்களுக்கான பட்டியலை, உதவி தேர்தல் அலுவலாிடம் சண்முகையா எம்.எல்.ஏ. வழங்கினார்.

Update: 2022-11-12 18:45 GMT

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் வாக்குச்சாவடி தி.மு.க முகவர்களுக்கான பட்டியலை மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அளித்த பரிந்துரைப்படி எம்.சி.சண்முகையா தலைமையில் தி.மு.க.வினர் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் அலுவலரும், தாசில்தாருமான நிஷாந்தனியிடம் வழங்கினார்.

அப்போது ஒன்றிய செயலாளர்கள் இளையராஜா, சுப்பிரமணியன், ஜெயக்கொடி, சரவணக்குமார், ராமசாமி, சுரேஷ் காந்தி, தூத்துக்குடி பகுதி செயலாளர்கள் சிவகுமார், ஆஸ்கர், ஓட்டப்பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்