பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முற்றுகை

பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முற்றுகை;

Update: 2023-03-29 18:45 GMT

பொள்ளாச்சி

தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியும் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காத கவர்னரை கண்டித்து மக்கள் விடுதலை முன்னணி சார்பில் பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் ராசு தலைமை தாங்கினார். போராட்டத்தில் கவர்னரின் புகைப்பட நகலை கிழித்து எறிய முயன்றனர். அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் நிர்வாகிகள் தம்பு, தென்னரசு உள்பட பலர் கலந்துகொண்டனர். இதையொட்டி பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்