அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

திருபுவனத்தில் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் படங்களை கிழித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-06-25 20:17 GMT

திருவிடைமருதூர்,

திருபுவனத்தில் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் படங்களை கிழித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தண்ணீர் பந்தல்

கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் கடைவீதியில் அ.தி.மு.க. சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. தண்ணீர் பந்தலில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, வைத்திலிங்கம் ஆகியோரின் படங்கள் வைக்கப்பட்டு இருந்தன.

படங்கள் கிழிப்பு

இந்தநிலையில் நேற்று மதியம் அ.தி.மு.க. நகர செயலாளர் சிங்செல்வராஜ் தலைமையில் அண்ணா தொழிற்சங்க செயலாளரும் முன்னாள் பேரூராட்சி உறுப்பினருமான ஆர். குருமூர்த்தி, துணை செயலாளர் டி. என். சுப்பிரமணியன், தகவல் தொழில் நுட்ப பிரிவு ஒன்றிய தலைவர் ஆட்டோ சங்கர், மாவட்ட பிரதிநிதி ராமலிங்கம் உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் தண்ணீர் பந்தலில் வைக்கப்பட்டிருந்த விளம்பர போர்டில் இருந்த ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் ஆகியோரின் படங்களை கிழித்து ஆர்ப்பாட்டத்ததில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஓ.பன்னீர்செல்வம், வைத்திங்கம் ஆகியோரை கண்டித்து கோஷம் எழுப்பினர். 

Tags:    

மேலும் செய்திகள்