அண்ணா சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு

அண்ணா பிறந்த நாளையொட்டி தக்கலையில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சிகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.;

Update: 2022-09-15 16:40 GMT

தக்கலை:

அண்ணா பிறந்த நாளையொட்டி தக்கலையில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சிகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பிறந்த நாள் விழா

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாத்துரையின் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தக்கலையில் உள்ள அண்ணா சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

குமரி மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளரும், தமிழக தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைத்துறை அமைச்சருமான மனோதங்கராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், பத்மநாபபுரம் நகராட்சி தலைவர் அருள் சோபன், முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் புஷ்பலீலா ஆல்பன், மாவட்ட பொருளாளர் மரிய சிசுகுமார், நகர செயலாளர் ரயீஸ் சுபிகான், ஒன்றிய செயலாளர்கள் அருளானந்த ஜார்ஜ், ரமேஷ்பாபு, அரசு வக்கீல்கள் ஜாண்சன், ஜெகதேவ், திருவிதாங்கோடு பேரூராட்சி தலைவர் நசீர், ஒன்றிய அவைத்தலைவர் நேசமணி, நகர அவைத்தலைவர் எட்ரின் மற்றும் நிர்வாகிகள் வக்கீல் சோபித ராஜ், ரேவன்கில், ராஜேந்திரராஜ், ஆலிவர் சேம்ராஜ், அஸீஸ், நாசர், வில்சன் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

மாலை அணிவித்து மரியாதை

இதுபோல் தி.மு.க. குமரி மேற்கு மாவட்ட துணைச்செயலாளர் வக்கீல் ஐ.ஜி.பி. ஜாண் கிறிஸ்டோபர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் நகராட்சி துணைத்தலைவர் மணி, மாவட்ட சிறுபான்மை பிரிவு துணைச்செயலாளர் அமானுல்லா, துணை அமைப்பாளர் சாந்தப்பன், முன்னாள் ஒன்றிய துணை செயலாளர் கலைகிரி, ஒன்றிய கவுன்சிலர் அனிதாகுமாரி, விலவூர் கிளை செயலாளர் குமாரசாமி, நகர இளைஞர் அணி அமைப்பாளர் அனிஷ்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதுபோல், அ.தி.மு.க., அ.ம.மு.க. போன்ற கட்சிகள் சார்பில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாைத செலுத்தப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்