பெண் போலீசின் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை

இரணியல் அருகே மதுகுடித்ததை கண்டித்ததால் பெண் போலீசின் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-04-19 18:45 GMT

திங்கள்சந்தை அருகே உள்ள தலக்குளம் கீழவிளை பகுதியை சேர்ந்தவர் மகேஷ் (வயது 35). கொத்தனாரான இவருடைய மனைவி சுஜிதா (27). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். நாகர்கோவில் ஆயுதப்படையில் போலீஸ்காரராக சுஜிதா பணியாற்றி வருகிறார்.

கடந்த சில மாதங்களாக மகேஷ் சரிவர வேலைக்கு செல்லாமல் மது பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இதனை சுஜிதா மற்றும் உறவினர்கள் கண்டித்து வந்ததாக கூறப்படுகிறது.

தற்கொலை

இதனால் மனமுடைந்த மகேஷ் கடந்த சில நாட்களுக்கு முன்பு விஷம் குடித்த நிலையில் வீட்டில் மயங்கி கிடந்தார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

மேலும் இதுகுறித்து சுஜிதா இரணியல் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மதுகுடித்ததை கண்டித்ததால் போலீஸ்காரரின் கணவர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்