கத்தியால் கையை அறுத்து போலீஸ்காரர் தற்கொலை முயற்சி

அறந்தாங்கியில் போலீஸ்காரர் கத்தியால் கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.;

Update: 2022-06-07 18:53 GMT

அறந்தாங்கி:

போலீஸ்காரர்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி போலீஸ் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வருபவர் ரமேஷ் (வயது 30). இவர், அறந்தாங்கி துணை போலீஸ் சூப்பிரண்டுக்கு கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் மீது பல்வேறு புகார் வந்ததால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷாபார்த்திபன், இவரை கடந்த 31-ந் தேதி புதுக்கோட்டை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்தார்.

தற்கொலை முயற்சி

இந்நிலையில், நேற்று முன்தினம் ரமேசுக்கு அரியலூர் மாவட்டத்திற்கு பணியிடை மாறுதல் செய்யப்படுவதாக உத்தரவு வந்துள்ளது. இதனால் வீட்டில் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட ரமேஷ் தனது இடது கையில் கத்தியால் அறுத்து கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்து உள்ளார்.

இதையடுத்து வீட்டில் இருந்த அவரது மனைவி மற்றும் உறவினர்கள் ரமேசை மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் அவரை டாக்டர்கள் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அறந்தாங்கி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்