தேவகோட்டையில் கைதான போலீஸ்காரர் பணியிடை நீக்கம்

தேவகோட்டையில் கைதான போலீஸ்காரர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.;

Update: 2023-09-02 19:49 GMT

தேவகோட்டை

தேவகோட்டையில் இருந்து கண்டியன்வயல் கிராமத்திற்கு பாண்டிசெல்வி (வயது 32) சம்பவத்தன்று இருசக்கர வாகனத்தில் சென்றார். அவர் தேவகோட்டை ஒத்தக்கடை சோதனைச்சாவடியில் நிற்காமல் சென்றதாக கூறி அங்கு பணியில் இருந்த கோர்பசேவ் மோட்டார் சைக்கிளில் விரட்டி சென்று வழிமறித்து உள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் இருந்து அந்த பெண் கீேழ விழுந்தார். போலீஸ்காரர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள், போலீஸ்காரருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து பாண்டிசெல்வி ேதவகோட்டை டவுன் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து கோர்பசேவை கைது செய்தனர். கைதான அவரை பணியிடை நீக்கம் செய்து சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்