போலீஸ்நிலையம் முற்றுகை

கம்பத்தில் தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பா.ஜ.க.வினர் போலீஸ்நிலையத்தை முற்றுகையிட்டனர்.

Update: 2022-11-23 19:00 GMT

கம்பத்தில், நேற்று மாலை பா.ஜ.க சார்பில் சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் ராம சீனிவாசன் கலந்து கொண்டார். அவரை வரவேற்று நகர் முழுவதும் நோட்டீஸ் ஒட்டப்பட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று தி.மு.க.வின் இளைஞர் அணி செயலாளராக உதயநிதி ஸ்டாலினுக்கு பதவி வழங்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானது. இதையடுத்து அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் கம்பம் பகுதியில் தி.மு.க.வைச் சேர்ந்த சிலர் நோட்டீஸ் ஓட்டினர். அப்போது பா.ஜ.க.வினரின் நோட்டீஸ் மீது தி.மு.க. நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இதை பார்த்த பா.ஜ.க.வினர் பொதுச்செயலாளர் பேராசிரியர் ராம சீனிவாசனிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து பா.ஜ.க. தகவல் தொழில்நுட்ப தேனி மாவட்ட தலைவர் கோபிநாத் பாண்டியன் தலைமையில் பா.ஜ.க.வினர் தெற்கு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். பா.ஜ.க. நோட்டீஸ் மீது தி.மு.க. நோட்டீஸ் ஒட்டியவர்களை கைது செய்யும்படி கோஷமிட்டனர். பின்னர் அவர்கள் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மூவேந்தரனிடம் புகார் கொடுத்தனர். அதன்பின்பு அவர்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்