போலீஸ் நிலையத்ைத முற்றுகையிட்ட கேபிள் ஆபரேட்டர்கள்
போலீஸ் நிலையத்ைத முற்றுகையிட்ட கேபிள் ஆபரேட்டர்கள்;
வீரபாண்டி
திருப்பூர் கே.செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சாமிநாதன் இவர் தமிழ்நாடு கேபிள் ஆபரேட்டர் அசோசியேசன் உறுப்பினராக இருந்து வருகிறார். இவர் கே. செட்டிபாளையம், வஞ்சி நகர் ஆகிய பகுதிகளுக்கு கேபிள் இணைப்புகளை வழங்கி வருகிறார். மேலும் வஞ்சி நகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் சுமார் 250-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு கேபிள் இணைப்புகளை வழங்கி வருவதாக தெரிகிறது. இந்நிலையில் தி.மு.க.வை சேர்ந்த பகுதி செயலாளர் கோவிந்தராஜ் மற்றும் ரத்தினசாமி, ராமு என்கிற ராமசாமி ஆகியோர் ஒன்று சேர்ந்து அடுக்குமாடி குடியிருப்பில் கேபிள் இணைப்புகளை துண்டித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சாமிநாதன் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் மனுவை அளித்தார். இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத சூழ்நிலையில் நேற்று தமிழக கேபிள் ஆப்ரேட்டர் அசோசியேஷன் நிர்வாகிகளின் வீரபாண்டி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
பின்னர் சம்மபந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோரிக்கை மனுவை வழங்கினர். மனுவைபெற்றுக் கொண்ட போலீசார் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து பின்பு அப்பகுதியில் இருந்து கலைந்து சென்றனர்.