பாட்டி- பேரன் கொலையில் போலீசார் 3 தனிப்படை அமைத்து விசாரணை

செங்கோட்டை அருகே பாட்டி- பேரன் கொலையில் போலீசார் 3 தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2022-07-12 16:51 GMT

கடையநல்லூர்:

தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகா அச்சன்புதூர் அருகே மேக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் அப்துல் கனி. இவருடைய மனைவி ஜைத்தூன் பீவி (வயது 70). இவரும், பேரன் காசிா் அலி (26) ஆகிய இருவரும் நேற்று முன்தினம் வீட்டின் அருகே அடித்துக் கொலை செய்யப்பட்டனர்.

இந்த கொலையில் குற்றவாளிகள் யார்? என்று இதுவரை தெரியவில்லை. அச்சன்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த கொலை தொடர்பாக தென்காசி துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமாறன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்