பா.ஜனதா அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு

பா.ஜனதா அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.;

Update: 2022-09-24 17:34 GMT

தமிழகத்தில் ஆங்காங்கே பா.ஜனதா நிர்வாகிகளின் வீடுகள், அலுவலகங்கள் மீது தாக்குதல் நடைபெற்று வருகிறது. இதையடுத்து பா.ஜனதா அலுவலகங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதுக்கோட்டையில் திருவப்பூர் பகுதியில் மாவட்ட பா.ஜனதா அலுவலகம் புதிதாக கட்டப்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல தற்போது தற்காலிகமாக இயங்கி வரும் பா.ஜனதா கட்சி அலுவலகம் முன்பும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்