திண்டுக்கல் தியேட்டரில் போலீஸ் பாதுகாப்பு
இராவண கோட்டம் திைரப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததால், திண்டுக்கல்லில் படம் வெளியிட்ட தியேட்டருக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.;
நடிகர் சாந்தனு நடித்த 'இராவண கோட்டம்' என்ற திரைப்படம் தமிழகம் முழுவதும் நேற்று வெளியானது. இந்த படம் வெளியாவதற்கு முன்பே சில சர்ச்சைகளில் சிக்கியது. எனவே படத்தை திரையிட்டால் தியேட்டரை முற்றுகையிட்டு போராடுவோம் என ஒரு அமைப்பு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனால் இராவண கோட்டம் திரைப்படம் வெளியான தியேட்டர்களுக்கு நேற்று போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அந்த வகையில் திண்டுக்கல்லில், நத்தம் சாலையில் உள்ள ஒரு தியேட்டரில் நேற்று இராவண கோட்டம் திரைப்படம் வெளியானது. இதையடுத்து அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுக்க தியேட்டர் முன்பு தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ரவிசங்கர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.