வழிப்பறி கொள்ளையை தடுக்க போலீசார் அதிரடி சோதனை வேட்டை - 7 பேர் கைது

சென்னையில் வழிப்பறி கொள்ளையை தடுக்க போலீசார் நடத்திய அதிரடி சோதனை வேட்டையில் 7 பேரை கைது செய்தனர்.;

Update:2022-07-15 10:48 IST

சென்னையில் தங்க சங்கிலி மற்றும் செல்போன் பறிப்பு போன்ற வழிப்பறி குற்றங்களை தடுக்க அதிரடி சோதனை வேட்டை நடத்த போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவிட்டார். அதன்பேரில் வழிப்பறி கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட பழைய குற்றவாளிகள் 574 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதைத்தொடர்ந்து பல்வேறு இடங்களில் சந்தேகத்தின்பேரில் சோதனையும் நடத்தப்பட்டது. இதில் 7 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

87 பேர்கள் திருந்தி வாழ்வதாக உறுதி மொழி எழுதி கொடுத்து விட்டு சென்றனர். 47 பேர்கள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு, அனுப்பி வைக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்