பைனான்சியருக்கு போலீசார் வலைவீச்சு

கந்து வட்டி புகாரில் பைனான்சியருக்கு போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;

Update:2023-09-26 00:15 IST

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாடாளன் வடக்கு மடவிளாகத்தை சேர்ந்தவர் ராஜா (வயது 35). பழக்கடை வைத்துள்ளார். இவர் கடைவீதியில் பைனான்ஸ் தொழில் நடத்தி வரும் திருக்கோலக்கா பகுதியை சேர்ந்த அண்ணாதுரை மகன் வினோத்குமார் என்பவரிடம் 2022 -ம் ஆண்டு ஜூன் மாதம் 12-ந் தேதி ரூ.3 லட்சம் கடனாக வாங்கியதாக கூறப்படுகிறது. 3 ஆண்டுகளில் ரூ. 9 லட்சம் செலுத்திய நிலையிலும் தன்னிடம், வினோத்குமார் மேலும் வட்டி கேட்டதுடன், தனது சரக்கு வாகனம் மற்றும் செல்போனை வினோத் குமார் எடுத்து சென்றதாக ராஜா புகார் செய்தார். இது குறித்த புகாரின் பேரில் சீர்காழி போலீசார் கந்துவட்டி உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான பைனான்சியர் வினோத்குமாரை தேடி வருகின்றனர். வினோத்குமார் மீது ஏற்கனவே 2 கந்துவட்டி வழக்குகளும், ஒரு குட்கா வழக்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்