கடலூரில் 300க்கும் மேற்பட்ட வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை

சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மற்றும் கொலை வழக்கு நிலுவையில் உள்ளவர்களின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.;

Update:2023-10-31 12:10 IST

கடலூர்,

குற்றவாளிகள் தங்களது வீடுகளில் ஆயுதங்களை பதுக்கி வைத்து கொலை உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடுவதாக புகார் எழுந்ததையடுத்து தமிழகம் முழுவதும் கொலைக்குற்றவாளிகள், சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் வீடுகளில் சோதனை நடத்த டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மற்றும் கொலை வழக்கு நிலுவையில் உள்ளவர்களின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கடலூர் மாவட்டம் தாழங்குடா மற்றும் தேவனாம்பட்டினம் பகுதியில் 40 வீடுகளில் போலீசார் அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடலூர் மாவட்டம் முழுவதும் 300க்கும் மேற்பட்ட வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Full View

Tags:    

மேலும் செய்திகள்