பிரதமர் மோடியின் சுவரொட்டியை இழிவுபடுத்தினார்களா?
பிரதமர் மோடியின் சுவரொட்டியை இழிவுபடுத்தினார்களா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
எஸ்.புதூர்,
எஸ்.புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு வாழ்த்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தன. இந்த நிலையில் புழுதிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே, புழுதிபட்டி அரசு கால்நடை மருந்தகம் எதிரே ஒட்டப்பட்டிருந்த பிரதமர் மோடியின் சுவரொட்டிகளை மர்ம நபர்கள் இழிவுபடுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பா.ஜ.க. மாவட்ட துணை தலைவர் நாகராஜன் கொடுத்த புகாரின் பேரில் புழுதிபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.