இருக்கன்குடிக்கு பாதயாத்திரை செல்ல பா.ஜ.க.வினருக்கு போலீசார் அனுமதி மறுப்பு-ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

இருக்கன்குடிக்கு பாதயாத்திரை செல்ல பா.ஜ.க.வினருக்கு போலீசார் அனுமதி மறுப்பு-ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

Update: 2023-04-01 18:42 GMT

சாத்தூர்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஜவுளி பூங்கா அமைப்பதற்காக மத்திய அரசு ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடி, நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், ஜவுளித்துறை மந்திரி பீஸ் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து சாத்தூர் பத்திரகாளி அம்மன் கோவிலில் இருந்து இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு பாரதீய ஜனதா கட்சியினர் பாதயாத்திரை செல்ல முடிவு செய்தனர். இதற்காக பா.ஜ.க.வினர் போலீசாரிடம் அனுமதி கேட்டிருந்தனர். ஆனால் போலீசார் இருக்கன்குடியில் பங்குனி பொங்கல் திருவிழா நடைபெறுவதால் அனுமதி தர மறுத்தனர். பாதயாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து சாத்தூர் பத்திரகாளி அம்மன் கோவில் அருகே பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது சில நாட்கள் கழித்து தங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும். மீண்டும் அனுமதி மறுக்கப்பட்டால் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் பாதயாத்திரை நடைபெறும். தி.மு.க. ஆட்சியில் கோவிலுக்கு செல்வதையே தடைவிதித்து வருகின்றனர் என கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்