விபத்துக்களை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்
வாணியம்பாடி பகுதியில் விபத்துக்களை தடுக்க போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.;
திருப்பத்தூர் மாவட்டம் முழுவதிலும் சாலை விதிகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டியதன் அவசியம் மற்றும் ஹெல்மெட் அணிய வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதன்பேரில் நேற்று மாலை வாணியம்பாடியை அடுத்த செட்டியப்பனூர் கூட்ரோட்டில் வாகன ஓட்டிகளுக்கு வாணியம்பாடி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி தலைமையிலான போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும், சாலை விதிகளை பின்பற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தினர்.
மேலும் செல்போனில் தொடர்பு கொண்டு யாரேனும் ஏ.டி.எம். கார்டு எண், ஓ.டி.பி. எண்களை கேட்டால் தெரிவிக்கக் கூடாது என்றும், கிராமப்புறங்களில் அடையாளம் தெரியாத நபர்களிடம் உஷாராக இருக்கும் படியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
சப்- இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் உடனிருந்தனர்.