காட்பாடி ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை

குடியரசு தினத்தை முன்னிட்டு காட்பாடி ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.;

Update: 2023-01-24 17:15 GMT

குடியரசு தினத்தை முன்னிட்டு அனைத்து ரெயில் நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காட்பாடி ரெயில் நிலைய வளகத்தில் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா தலைமை ரெயில்வே போலீசார் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர்.

மேலும் காட்பாடி வழியாக சென்ற ரெயில் பெட்டிகளில் ஏறி பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர்.

காட்பாடி ரெயில் நிலைய வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் அலுவலகத்தில் உள்ள மானிட்டர் மூலம் தீவிரமாக 24 மணி நேரமும் போலீசார் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ரெயில் நிலைய வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்