சென்னையில் போக்குவரத்து நெரிசலை தடுக்க போலீசார் சிறப்பு சோதனை

சென்னையில் போக்குவரத்து நெரிசலை தடுக்க, சாலைகளில் இடையூறாக நிற்கும் வாகனங்கள், கட்டுமானப்பொருட்களை போலீசார் அகற்றி வருகின்றனர்.;

Update: 2022-06-25 08:49 GMT

கோப்புப்படம் 

சென்னை,

சென்னையில் போக்குவரத்து நெரிசலை தடுக்க சிறப்பு சோதனையில் ஈடுபட்ட போலீசார், சாலைகளிலிருந்து 61 வாகனங்களையும், 117-க்கும் மேற்பட்ட கட்டுமான பொருட்களையும் அகற்றியுள்ளனர்.

இதுதொடர்பாக சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில், போக்குவரத்து நெரிசலை தடுக்க, சாலைகளில் இடையூறாக நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை அகற்ற சிறப்பு சோதனை நடைபெற்றதாகவும், இந்த சோதனையின்போது கேட்பாரற்று கிடந்த 61 வாகனங்கள் அகற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகனங்களின் உரிமையாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் சட்டத்தின்படி தண்டிக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த 117-க்கும் மேற்பட்ட கட்டுமான பொருட்கள் அகற்றப்பட்டதாகவும், போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த கடைகளின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த சிறப்பு சோதனை தொடரும் எனவும் கூறியுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்