விபத்தில்லா தீபாவளி கொண்டாட போலீசார் விழிப்புணர்வு
விபத்தில்லா தீபாவளி கொண்டாட போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.;
ஆரணி=
விபத்தில்லா தீபாவளி கொண்டாட போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஆரணி நகரில் காந்தி ரோடு மற்றும் பழைய பஸ் நிலையம் மணிகூண்டு அருகில் கண்காணிப்பு கோபுரம் அதமத்து அதில் நின்றவாறு நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல் ராஜன் தலைமையில் ஒலிபெருக்கி மூலம் குற்றச்செயல்களை தடுக்க கண்காணித்து வருகின்றனர். மேலும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் கலந்துகொண்டு ஒரு நிமிடம் போக்குவரத்தை நிறுத்தி ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.
அப்போது மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பெண்கள் அதிக நகைகளை அணிந்து வர வேண்டாம். பாதசாரிகள் சாலைகளின் இடது புறமாக நடந்து செல்ல வேண்டும், வாகன ஓட்டனர்கள் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்று கூறியதோடு தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியோடு விபத்தில்லாமல் கொண்டாடுவதற்கான ஆலோசனைகளையும் வழங்கினார். அப்போது இன்ஸ்பெக்டர் கோகுலராஜன், ஆரணி நகர போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் உள்பட கலந்து கொண்டனர்.