சாராயம் காய்ச்சுவதை தடுக்க போலீசார் தொடர் கண்காணிப்பு
சாத்கர் மலையில் சாராயம் காய்ச்சுவதை தடுக்க போலீசார் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவின் பேரில் சாத்கர் மலையில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி தலைமையில் உள்ளூர் போலீசார் மற்றும் சிறப்பு போலீசார் 10 பேர் கொண்ட குழுவினர் டங்கா, மாமரத்து பள்ளம், பால்சுனை இலந்தை மரத்து ஏரி உள்ளிட்ட இடங்களில் சாராயம் காய்ச்சப்படுகின்றதா என தினமும் மலைக்கு சென்று காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதால் சாராய வியாபாரிகள் மலையில் வேறு பகுதிகளுக்கு தங்கள் இருப்பிடத்தை மாற்றியுள்ளனர்.