விதிகளுக்குட்பட்டு கட்டணம் வசூலிக்க வேண்டும்: ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு காவல்துறை வேண்டுகோள்

ஆட்டோ மற்றும் டாக்ஸிகள் விதிகளுக்குட்பட்டு கட்டணம் வசூலிக்க வேண்டும் என சென்னை காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

Update: 2023-05-29 14:13 GMT

சென்னை,

சென்னையில் மாநகர பஸ்கள் தற்காலிகமாக இயக்கப்படாததால் பொதுமக்கள் வீட்டிற்கு செல்ல உதவுமாறு ஆட்டோ ஒட்டுநர்களுக்கு போக்குவரத்து காவல்துறை வேண்டுகோள் விடுக்கிறது, விதிகளுக்கு உட்பட்டு கட்டணம் வசூலிக்க வேண்டும் என ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளது. பயணிகள் பாதிப்பை கருத்தில் கொள்ளாமல் போராட்டம் செய்வது நியாயமா? என பயணிகள் தங்களது ஆதங்கத்தை தெரிவித்தனர்.

சென்னை மாநகர பேருந்துகளில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களின் திடீர் போராட்டம் காரணமாக ஆட்டோக்களில் வழக்கத்தைவிட ரூ.75 வரை கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டதாக கூறப்பட்டது.சென்ட்ரல் - பல்லாவரம் டாக்ஸி கட்டணம் ரூ.550 வரை உயர்த்தப்பட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

சென்னையில் மாநகர அரசு பஸ்கள் பேச்சுவார்த்தைக்கு பின் மீண்டும் வழக்கம் போல் இயங்க தொடங்கின. தானியார் மூலம் ஓட்டுநர்கள் நியமிக்கப்படுவதை எதிர்த்து தொழிற்சங்கத்தினர் திடீர் போராட்டம் நடத்திய நிலையில் அமைச்சரின் அறிவுறுத்தலையடுத்து பஸ்கள் மீண்டும் இயக்கத்தொடங்கின.

Tags:    

மேலும் செய்திகள்