பொள்ளாச்சியில் செல்போன் கடைக்காரர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு
பொள்ளாச்சியில் செல்போன் கடைக்காரர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு
பொள்ளாச்சி
பொள்ளாச்சி பகுதியில் அண்மையில் செல்போன் திருடிச் சென்ற வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்கள் பொள்ளாச்சியில் உள்ள செல்போன் கடையில் விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் திருடிய செல்போனை வாங்கிய கடைக்காரரையும் கைது செய்துள்ளனர். இந்நிலையில் பொள்ளாச்சி மேற்கு போலீஸ் நிலையத்தில் பொள்ளாச்சி செல்போன் கடை உரிமையாளர்களுக்கு ஆலோசனை கூட்டம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி பொள்ளாச்சி மேற்கு போலீஸ் நிலையத்தில் நடைபெற்றது. பொள்ளாச்சி மேற்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மணிக்குமார் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- தற்போது பொள்ளாச்சியில் செல்போன் திருடிய வழக்கில் திருடிய செல்போனை வாங்கிய கடைஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். இனிவரும் காலங்களில் இதுபோல சம்பவங்கள் நடைபெறக் கூடாது. பழைய செல்போன்களை செல்போன் கடைக்காரர்கள் வாங்கும் போது அதற்கு உண்டான பில்லை வாங்கிக் கொண்டு அதன் பின்னரே அந்த செல்போனை வாங்க வேண்டும். அதேபோல் செல்போன் கடையின் உள்பகுதியிலும் வெளிப்பகுதியிலும் அனைத்து கடைகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்துவது அவசியம்.என்றார்.