பெண்ணிடம் நகை திருட்டு பற்றி போலீசார் விசாரணை
பெண்ணிடம் நகை திருட்டு பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை காளவாசல் பகுதியை சேர்ந்தவர் அமுதா (வயது 45). சம்பவத்தன்று இவர், அரசு பஸ்சில் எல்லீஸ்நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பஸ்சில் பயணித்த மர்மநபர் அமுதாவிடம் இருந்த 3½ பவுன் நகை, ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை திருடி விட்டு தப்பி சென்றுவிட்டார். இதுகுறித்து அமுதா அளித்த புகாரின் பேரில் எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.