புறக்காவல் நிலையம் மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்

காளையார்கோவில் பஸ் நிலையத்தில் புறக்காவல் நிலையம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வணிகர் சங்கங்களின் பாதுகாப்பு பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.

Update: 2022-10-06 18:35 GMT


காளையார்கோவில் பஸ் நிலையத்தில் புறக்காவல் நிலையம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வணிகர் சங்கங்களின் பாதுகாப்பு பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.

மனு

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பாதுகாப்பு பேரவை சார்பில் மாவட்டதலைவர் கஸ்பார் தலைமையில் மாநில துணைத்தலைவர் முத்துக்குமார், மாவட்ட பொறியாளர் அணி தலைவர் பாலமுருகன், நிர்வாக குழு துணை தலைவர் பாலகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் சுந்தரம், இளை ஞரணி அமைப்பாளர் பார்த்திபன், பொறியாளர் அணி துணைத் தலைவர் அழகுராஜா, ஆகியோர் சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாரிடம் மனு கொடுத்தனர். அதில் கூறியுள்ளதாவது:-

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் மதுரை- தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இதில் ஏராளமான பொதுமக்கள் தினசரி வந்து செல்கின்றனர். மேலும் காளையார் கோவில் பஸ் நிலையத்தை சுற்றி ஏராளமான வர்த்தக நிறுவனங்களும் செயல்படுகிறது. இங்கு செயல்பட்டு வந்த பஸ் நிலைய புற காவல் நிலையம் கடந்த சில மாதங்களாக செயல்படாமல் உள்ளது.

நெரிசல்

இதனால் பொதுமக்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு போதுமான பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. எனவே காளையார்கோவில் பஸ் நிலைய புறக்காவல் நிலையம் செயல்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பஸ் நிலையப் பகுதி அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதியாக உள்ளது. எனவே இங்கு பொதுக்கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தும் பொழுது பயன்படுத்தப்படும் ஒளி பெருக்கிகளின் சத்தத்தின் அளவை குறைத்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்