வீரமரணம் அடைந்த போலீசாருக்கு மலர் அஞ்சலி

வீரமரணம் அடைந்த போலீசாருக்கு தர்மபுரியில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

Update: 2023-10-21 19:00 GMT

கடந்த 1959-ம் ஆண்டு லடாக் பகுதியில் சீனப்படையினரால் தாக்கப்பட்டு ராணுவ வீரர்கள் மரணமடைந்தனர். அந்த போரில் நாடு முழுவதும் சுமார் 264 பேரும், தமிழகத்தில் 3 பேரும் வீரமரணம் அடைந்தனர். இந்த நாளை வீரவணக்க நாளாக நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில் பணியின்போது உயிரிழந்த போலீசாருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி நேற்று தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் பணியின்போது உயிரிழந்த போலீசாருக்கு வீரவணக்க மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமை தாங்கி அங்குள்ள நினைவுத்தூரில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இதைத்தொடர்ந்து 63 குண்டுகள் முழங்க பணியின்போது உயிரிழந்த காவலர்களுக்கு வீரவணக்க நாள் அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் போலீஸ் சூப்பிரண்டு புகழஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், துணை போலிஸ் சூப்பிரண்டுகள் மகாலிங்கம், நாகலிங்கம், சத்தியமூர்த்தி போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அன்பழகன், ரங்கசாமி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்